கேள்விகள்

தமிழ்99 குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான விடைகள்

1. தமிழ்99 விசைப்பலகை முறையில் எழுதிப் பழக எவ்வளவு நாளாகும்?

தமிழ்99 விசைப்பலகை அமைப்பைப் புரிந்து கொண்டு எழுதத் தொடங்க ஒரு சில நிமிடங்களே போதும். வேகமாக எழுதக் கை வர ஓரிரு வாரங்கள் பயிற்சி போதும். நீங்கள் முதன்முதலில் தமிழில் எழுதத் தொடங்கும்போதே தமிழ்99 முறையைப் பின்பற்றினால் இதைப் பழகிக் கொள்வது எளிது. ஏற்கனவே தமிங்கில விசைப்பலகை, பாமினி விசைப்பலகை போன்றவற்றைப் பழகி இருந்தால் தமிழ்99 கைவர கூடுதல் நாட்கள் ஆகலாம். ஆனால், தமிழ்99க்கு மாறுவது என்று முடிவெடுத்து விட்டால் நீங்கள் ஏற்கனவே பழகியிருக்கும் பிற விசைப்பலகை முறைகளை முற்றிலும் தூக்கிப் போட்டு விட்டு இதற்கு மாறினாலே வேகம் கைக்கூடும். உங்கள் வழமையான பணிகளுக்கு வேறு விசைப்பலகையையும் பழகுவதற்கு என்று நாளுக்கு சில மணித்துளிகள் தமிழ்99க்கு என்றும் ஒதுக்கினால், கற்றுக் கொள்வது சிரமம். நீங்கள் ஏற்கனவே பழகி இருக்கும் முறையையும் குழப்பி விடும்.

2. எனக்கு QWERTY ஆங்கில விசைப்பலகையில் ஆங்கிலத் தட்டச்சு நன்றாகத் தெரியும். ஆங்கிலத்தில் எழுத ஒரு விசைப்பலகை, தமிழுக்கு ஒரு விசைப்பலகை என்று பழகினால் மூளை குழம்பாதா?

குழம்பாது. ஏற்கனவே தமிழ்99 பழகி நன்றாக இருக்கும் நாங்களே சாட்சி ;)

தமிழ்99 பழகிய பிறகு ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளிலும் வெவ்வெறு விசைப்பலகைகளில் எந்தக் குழப்பமும் இன்றி சீரான வேகத்தில் எழுதத் தொடங்கும்போது தான் நம் மூளையின் திறனை நாமே உணர்ந்து கொள்வோம்.

3. இதைக் கற்றுக் கொள்வது இலகுவா? எனக்கு அந்த அளவு திறமை இல்லையே?

இதைக் கற்றுக் கொள்வது மிகவும் இலகுவானது. தனித்த திறமை ஏதும் தேவை இல்லை. இந்த விசைப்பலகையைக் கற்றுக் கொள்வதற்கும் மொழியறிவுக்கும் தொடர்பு இல்லை.

4. யார் எல்லாம் தமிழ்99க்கு மாறலாம்? மாற வேண்டும்?

எல்லா தமிழர்களும் தான் ;)

வேகமாக, அயர்ச்சியின்றி, நிறைய தட்டச்ச உதவுவது தமிழ்99ன் சிறப்பு. எனவே இணையத்தில், கணினியில் தமிழில் எழுத நிறைய நேரம் செலவிடுபவர்கள், தொழில்முறையில் கணினியில் தட்டச்சு செய்பவர்கள் உடனடியாக தமிழ்99க்கு மாறிக் கொள்வது பெரிதும் பரிந்துரைக்கத்தக்கது.

5. எனக்கு ஏற்கனவே QWERTY ஆங்கில விசைப்பலகை பயிற்சி உண்டு. ammaa = அம்மா என்று எழுதுவது இலகுவாக இருக்கிறதே? இது போல் எழுத நிறைய மென்பொருள்கள் இருக்கிறதே? ஒவ்வொரு மொழிக்கும் ஒரு விசைப்பலகையைக் கற்கவா முடியும்? நான் ஏன் தமிழ்99க்கு மாற வேண்டும்? வேண்டுமானால் ஆங்கிலம் அறியாதவர்கள் மட்டும் தமிழ்99 பயன்படுத்தலாமோ?

* ஏன் தமிழ்99 சிறந்த தமிழ் விசைப்பலகையாகக் கருதப்படுகிறது?

* ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும்?

ஆகிய இரண்டு கட்டுரைகளைப் படியுங்கள். இவற்றில் ஏன் தமிங்கில விசைப்பலகையில் இருந்து தமிழ்99க்கு மாற வேண்டும் என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

சுருக்கமாகச் சொல்வதென்றால்,

* ammaa = அம்மா என்று எழுதும் தமிங்கில விசைப்பலகையைக் காட்டிலும் இதில் வேகமாகவும், இலகுவாகவும், அயர்ச்சி இன்றியும், நிறைய தமிழில் எழுதலாம். QWERTy விசைப்பலகையில் ஒரு தமிழ்ச்சொல்லை எழுத கூடுதல் விசை அழுத்தங்கள் தேவை. தமிழ்99 முறையில் மிகக் குறைவான விசையழுத்தங்களே தேவை. இதனால், தமிழில் எழுதும் உங்கள் வேகம் கூடும்.

* ammaa = அம்மா என்று எழுதும் போது, உங்கள் மூளையில் தமிழ் எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்களாக மாற்றி எழுதுவதால் உங்களை அறியாமல் உங்கள் சிந்தனை வேகம் குறைகிறது. தவிர, வருங்காலத் தமிழ்த் தலைமுறை
இப்படி தமிழ் எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்களாக மனதில் பதித்துக் கொள்வது சரியா?

6. எனக்கு ஏற்கனவே தட்டச்சுப் பொறியில் தமிழில் எழுதுவதற்கான விசைப்பலகை முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். நான் ஏன் தமிழ்99க்கு மாற வேண்டும்?

தமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு கட்டுரையைப் பார்க்கவும்.

7. தமிழ்99 முறையில் எழுத மென்பொருள்கள் எங்கு கிடைக்கும்? காசு கொடுக்க வேண்டுமா?

தமிழ்99 முறையில் எழுத இலவச மென்பொருள்களே போதும். http://tamil99.org/tamil99-software பாருங்கள்.

8. என்னிடம் ஏற்கனவே இருக்கிற விசைப்பலகை கொண்டே எழுத முடியுமா? இல்லை, இதற்கு என்று புதிதாக விசைப்பலகை வாங்க வேண்டுமா?

உங்களிடம் ஏற்கனவே இருக்கிற விசைப்பலகையே போதும். கணினியில் தமிழில் எழுத உங்கள் விசைப்பலகையில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கத் தேவையில்லை.

9. சில மென்பொருள்களில் தமிழ்99 தட்டச்சு முறை இருக்கிறது. ஆனால் இங்கு குறிப்பிட்டுள்ள குறுக்கு வழிகள், வசதிகள் இல்லையே?

நீங்கள் பயன்படுத்தும் மென்பொருளில் அனைத்து தமிழ்99 குறுக்கு வழிகள், வசதிகளும் செயற்படுத்தப்படாமல் இருக்கலாம். http://tamil99.org/tamil99-software பரிந்துரைக்கப்பட்டுள்ள மென்பொருள்களைப் பயன்படுத்துங்கள்.

10. தமிழ்99 விசைப்பலகையில் உள்ள தமிழ் எழுத்துக்களை நினைவில் கொள்ள என்ன வழி?

உயிர் குறில்கள் – இட நடு வரிசை
உயிர் நெடில்கள் – இட மேல் வரிசை.
அதிகம் பயன்படாத ஒ, ஓ, ஔ இட கீழ் வரிசை.

அதிகம் பயன்படும் க ச த ப – வல நடு வரிசை.

அடிக்கடி ஒன்றாக வரும் ஞ்ச, ன்ற, ண்ட, ந்த, ம்ப, ங்க போன்ற எழுத்து வரிசைகள் பக்கம் பக்கமாக உள்ளன.

இப்படி நினைவில் வைத்துக் கொள்வது உதவலாம்.

11. நான் தினமும் தமிழில் நிறைய தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேனே? இதைப் பழகுவதற்காக எப்படி ஓரிரு வாரங்கள் அதைக் குறைத்துக் கொள்வது?

தமிழில் எழுதுவது என்பது உங்கள் வாழ்நாள் முழுக்க நீங்கள் செய்யப் போகும் ஒன்று. ஓரிரு வாரங்கள் இதைப் பழகுவதற்காகக் கொஞ்சம் பொறுத்து முயற்சி செய்தால் வாழ்நாள் முழுதும் நீங்கள் தமிழ் எழுதச் செலவிடும் நேரத்தில் 30% முதல் 40% நேரம், அயர்ச்சியைக் குறைக்கலாம். இதைக் கருத்தில் கொண்டு முடிவு எடுங்கள்.

மேலும் கேள்விகள் இருந்தால் இங்கே தெரிவியுங்கள்!

{ 2 trackbacks }

தமிழ்99 செய்திகள்
October 13, 2009 at 8:07 pm
பிற தளங்களில் எழுதியவை..
October 13, 2009 at 8:12 pm

{ 44 comments… read them below or add one }

1 J Ravichandran August 17, 2008 at 8:42 am

ஐயா,
நான் ஒரு சிறு பத்திரிக்கை நடத்துகிறேன்.எனக்கு கட்டுரைகள் அனுப்புவோர் கையால் எழுதி அனுப்பிவருகிறர்கள்.ஆனால் நான் தற்போது அனைவரையும் கணினியில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளேன்.எனது பதிப்பாளர் சிறீலிபி(shreelipi) font உபயோகப்படுத்துகிறார்.நான் எனது நண்பர்களை பழைய /புதிய தட்டச்சு விசைப்பலகையை உபயோகித்து எந்த free font ல் அடிக்கச் சொல்ல வேண்டும். அது unicode fontஆக இருக்க வேண்டும் , அப்போதுதான் என்னால் எனது வீட்டில் உள்ள கணினியில் (P VI windows xp os)edit செய்யவும் அதை சிறீலிபி(shreelipi) fontக்கு மாற்ற முடியும் எனக் கருதுகிறேன்.த்யவு செய்து உதவவும்.நன்றி.

Reply

2 ரவிசங்கர் August 17, 2008 at 9:57 am

ரவிச்சந்திரன்,

http://software.nhm.in/writer.html என்ற முகவரியில் கிடைக்கும் NHM writer என்ற மென்பொருளைக் கொண்டு உங்கள் படைப்பாளிகள் எழுதலாம். இதில் shrilipi, unicode இரண்டு முறைகளிலும் எழுதும் தெரிவுகள் உண்டு.

உங்கள் சிறுபத்திரிகைக்கு எங்கள் வாழ்த்துகள்.

Reply

3 Ravichandran j August 20, 2008 at 1:07 am

அய்யா,
பதிலுக்கு நன்றி.
tamil 99 ல் தத்,மம்,டட் போன்றவற்றை எப்படி தட்டச்சு செய்வது?

Reply

4 ரவிசங்கர் August 20, 2008 at 3:36 am

த+அ+த+f = தத்

தத்தை, தத்துவம் போன்ற தத்த என்று வரும் இடங்களில் த+அ+த+த என்று வரிசையாக அடிக்கலாம். இடையில் f தேவையில்லை. மம், டட் போன்றவற்றையும் இப்படியே எழுதலாம்.

Reply

5 ஜெ இரவிச்சந்திரன் August 22, 2008 at 10:54 am

ஐயா,
எவ்வளவு முயன்றும் “தத்” வர மாட்டேங்கிறதே?த்த் என்றுதான் வ்ருகி்றது.உதவவும்.

Reply

6 ரவிசங்கர் August 22, 2008 at 2:41 pm

நீங்கள் என்ன மென்பொருள் பயன்படுத்துகிறீர்கள்? சிலவற்றில் வழு இருக்கலாம். NHM writer, எ-கலப்பை போன்றவற்றில் சரியாக வரும்.

Reply

7 ஜெ இரவிச்சந்திரன் August 23, 2008 at 6:06 am

ஐயா,
நான் nhm writer பயன்ப்டுத்துகிறேன். இதில் என்ன பிழை இருக்கும்?
அது சரி,இன்று ஏன் கொக்கி எழுத்துக்கள் எல்லாம் ஒழுங்காகத் தெரியவில்லை.கொக்கிகள் எல்லாம் எழுத்தின் பின்பாகத்தில் உள்ளன

Reply

8 ஜெ இரவிச்சந்திரன் August 23, 2008 at 6:11 am

ஐயா,
நானே கண்டுப்பிடித்துவிட்டேன்.Opera browser ல் author mode ல் இப்படி சரிவரத் தெரிய மாட்டேங்கிறது.ஏன்?

Reply

9 ரவிசங்கர் August 23, 2008 at 9:25 am

இரவிச்சந்திரன், நீங்க என்னை ரவின்னே அழைக்கலாம். ஐயா வேண்டாம் :)

எழுத்துகள் ஓப்பரவாவில் கொம்பும் கொக்கியுமாகத் தெரிந்தது குறித்து சுட்டிக் காட்டியதற்கு நன்றி. தள வார்ப்புருவை மாற்றிய பிறகு இப்பிரச்சினை இல்லை.

//தத்தை நத்தை தத்துவம் மம்மி//

மேற்கண்ட சொற்களை opera 9.5, windows xp, nhm writer 1.4.0.1 பதிப்பு கொண்டு எழுதி இருக்கிறேன். உங்களால் ஏன் எழுத இயலவில்லை என்று புரியவில்லை :(

Reply

10 ஜெ இரவிச்சந்திரன் September 10, 2008 at 4:14 am

ரவி,
wordpad ல் அடித்தால் நீங்கள் சொல்வது நடக்கிறது. ஆனால், word 2007 ல் latha font ல் தான் பிரச்சினை.

Reply

11 தமிழ் முகிலன் October 12, 2008 at 10:48 am

ஐயா, தமிழ்99 முறையில் தமிழ் எண்களை தட்ட என்ன செய்ய வேண்டும். தமிழ் எண்ணுருக்களைக் கொண்ட எழுத்துருக்கள் எவை?

Reply

12 ravishankar October 16, 2008 at 11:29 am

http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx என்ற முகவரியில் உள்ள nhm writer பயன்படுத்தி எழுதலாம்.

1~ என்று எழுதினால் அதற்கான தமிழ் எண்ணான ௧ வரும். இதே போல் 2~ , 3~ என்று எழுதிப் பார்க்கவும்.

தகவலுக்கு நன்றி – nhm writer உருவாக்கிய nagarajan.

Reply

13 கா. சேது October 27, 2008 at 1:52 am

ஜெ இரவிச்சந்திரன் // Sep 10, 2008 at 4:14 am :

//ரவி,
wordpad ல் அடித்தால் நீங்கள் சொல்வது நடக்கிறது. ஆனால், word 2007 ல் latha font ல் தான் பிரச்சினை.//

அப்பிரச்சினை இருப்பின் லதா எழுத்துரு பயன்பாட்டுக்கு மட்டுமல்ல வேறு எந்த எழுத்துருவானாலும் அதே பிரச்சினை word 2007 இல் இருக்கும்.

இவ்வழு பற்றி பல மாதங்கள் முன் wg02infitt யாகூ மடலாற்ற குழுமத்தில் எழுப்பட்டிருந்ததை முகுந்தராசு FTC மடலாற்ற குழுமத்திற்கு முன்கொணர்ந்த போது அதற்கான எனது வழு அகற்றும் மறுமொழி பின்வரும் பக்கத்தில் உள்ளது :

http://lists.thamizha.com/pipermail/freetamilcomputing_lists.thamizha.com/2008-February/000609.html

சுருக்கமாக சொல்லவதானால் பின்வருமாறு செய்யவும் :

1) Start–>AllPrograms–>Microsoft Office–>Microsoft Office Tools அமுக்கி வரும் பட்டியலில் “Microsoft Office 2007 Language Settings” என்பதைச் சொடுக்கவும்.

ஒருக்கால் மேற்கூறியவாறு Start menu வழியாக இந்த Language Settings க்கான தொடுப்பு காணப்படாவிடில் எனது மேற்காட்டிய மறுமொழியில் சொன்னது போல பின்வருபனவற்றைச் செய்யுங்கள்:

a). வேர்ட்-2007 சாரளத்தில் மேல் இடது கோடியில் விண்டோவிற்கான சின்னத்துடன் தெரியும் பட்டனை அமுக்கி வரும் நிரல் பெட்டியில் “Word Options” என ஒரு பட்டன் இருக்கும். அதை அமுக்குங்கள்.

b). திறக்கப்பட்டிருக்கும் “Word Options” நிரல் பெட்டியில் “Language Settings” பட்டனை அமுக்குங்கள்.

(அந்த “Language Settings” எல்லா MS Office 2007 செயல் நிரல்களுக்கும் பொதுவானதே)

2) அடுத்து திறக்கப்பட்டிருக்கும் “Microsoft Office Language Settings 2007″ நிரல் பெட்டியில் “Primary editing language” என்பது தமிழாக தேர்வு செய்யப்பட்டிருப்பின் அதை ஆங்கிலத்திற்கு மாற்றுங்கள். அதன் மேலே “Enabled editing languages” என்பதற்கான பட்டியலில் “Tamil (India)” என்பதை அகற்ற “Remove” பட்டனை அமுக்குங்கள்.

அதன் பின் Word 2007 மீளாரம்பித்து தங்கள் தமிழ் விசைப்பலகை வழி தட்டச்சு செய்து பாருங்கள். பிரச்சினைகள் இருக்காது.

எனது மேற்கூறிய FTC க்கான மறுமொழியில் Bhashaindia.com வின் Tamil IME விசைப்பலகைகள் வழியாக இந்த Language Settings க்கு மாற்றமில்லாமிலும் வழுக்கள் இல்லாமல் தட்டச்சு செய்ய இயலும் என்பதைத் தெரிவித்திருந்தேன். ஆனால் தற்போது Bhashaindia.com வின் பதிவிறக்கப் பக்கமான http://www.bhashaindia.com/downloadsV2/Category.aspx?ID=1 பாதுகாப்பான தளம் அல்ல என பயர்பாக்சில் எச்சரிக்கை வருகிறது. காரணங்களை http://safebrowsing.clients.google.com/safebrowsing/diagnostic?client=Firefox&hl=en-US&site=http://www.bhashaindia.com/downloadsV2/Category.aspx?ID=1 என்ற பக்கத்தில் பார்க்கலாம். எனவே அவ்வெச்சரிக்கை அகலும் வரை அங்கு பதிவிறக்கம் எதுவும் செய்ய வேண்டாம்.

~சேது

Reply

14 arun October 28, 2008 at 9:23 pm

sir i am college student. online job is real or cheating . please tell me i am not prober communication engilsh, so i cant not anterstand to the job. and i am intrest to parttime job .. any web address requred.. and one time i applied to online job he is cheating.that job is one link in copy to mail to all. he is taken to Rs.1,500 what i can i to.please reply in tamil.please

Reply

15 ராம் சங்கர்.வ October 29, 2008 at 10:21 am

தமிழுக்கு வணக்கம்,
நான் தமிழ்99 ஐ எனது மேக்புக்-ல் உபயோகிக்க விரும்புகிறேன், ஆனால் “க” எழுத்துக்கு பதில் “ஹ” என்று வருகிறது. என்ன செய்வது?

Reply

16 ஊரோடி பகீ November 10, 2008 at 9:40 pm

ராம் சங்கர்,

நீங்கள் மக்புக்குடன் இணைந்து வரும் தமிழ்99 இனை பயன்படுத்துபவராயின் எந்த பிரச்சனையும் இல்லை. எச் எழுத்துக்கு சரியாக க எழுத்து அச்சாகிறது.

Reply

17 நிமல் - NiMaL December 3, 2008 at 12:33 pm

உபுண்டு 8.10 ல் தமிழ் 99 இல் தட்டச்சுவது எப்படி?

Reply

18 ரவிசங்கர் September 3, 2009 at 1:15 am

https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-November/001665.html முயன்று பாருங்கள், நிமல். எனக்கு உபுண்டு 9.04ல் தட்டச்ச உதவியது.

Reply

19 angayatcanny December 15, 2008 at 12:52 pm

i want to know do this work in all different OS?
and compatibility? i’m not such familiar with the computer and its operations. could you please explain me how and where i have to start to use this? i want to know shall i use this to type in tamil in the internet use such as email or blogging or in such as facebook?

Reply

20 angayatcanny December 15, 2008 at 1:03 pm

தமிழ் 99 ஐ முயற்சிக்கிறேன்.
கேள்வியை நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி?

Reply

21 prashanth December 16, 2008 at 12:04 am

hello sir,
i want to know tamingalai fonts and deails

Reply

22 ரவிசங்கர் December 16, 2008 at 10:24 pm

நிமல்,

மயூரனிடம் வந்த பதில்: தபுண்டுவின் 8. 10 பதிப்பு ஒரு தெரிவுக்குழப்பத்தில் தடைப்பட்டுப்போனது. im switch எனும் மெபொருள் பற்றிய இந்த குழப்பத்தை நீக்கி சேது இடவுள்ள மடலொன்றன்பின் அது வெளிவரும்.

angayatcanny,

yes, you can type using this in all OS like windows, linux and mac.

To start with, you can download NHM writer from http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx , install and start using it. u can download the user manual too at http://software.nhm.in/writer/NHMWriter-User%20Manual.pdf

yes, u can type using it in both offline and online applications like email, facebook and Microsoft office etc.,

I suppose you use some transliteration web page and cut copying from there. when use softwares like NHM writer, you can right straightaway in tamil in any page

Prashanth,

Please install NHM writer from http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx
it will automatically install tamil unicode fonts and help u write in tamil

Reply

23 angayatcanny December 26, 2008 at 8:55 am

Thank you very much!
I’ll try and ask if there any problem and doubts.
as i said earlier i don’t have experience with computer.
so it may be a challenging and need some effort.

Reply

24 ப. இராசமோகன் December 31, 2008 at 6:11 am

ஐயா

இ கலப்பையைப் பயன்படுத்தி வலைத்தளங்களில் தட்டுகிறேன். ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு phonetic முறையில் தட்டுகிறேன். தமிழ் 99 எனக்கு நன்றாகத் தட்ட வரும். ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தட்டி விட்டுத் தமிழ் 99ல் தட்ட நேரும்போது பெரும் குழப்பம் நேர்கிறது. என்னிடம் உள்ள இ கலப்பையில் தமிழ் 99 இல்லை. அதில் தமிழ் 99 ஐப் புகுத்துவ்து எப்படி? அல்லது தமிழ் 99 உடன் இ கலப்பை கிடைக்குமா?

அன்புடன் தெரியப்படுத்துங்கள்.
ப. இராசமோகன்.

rajamohan.palaniswamy@ymail.com

Reply

25 ரவிசங்கர் December 31, 2008 at 8:41 pm

இராசமோகன்,

எ-கலப்பை phonetic (அஞ்சல்) விசைப்பலகைக்கான மென்பொருளும் தமிழ்99 விசைப்பலகைக்கான மென்பொருளும் தனித்தனியே கிடைக்கின்றன. இரண்டையும் ஒரே நேரத்தில் ஒரே கணினியில் நிறுவிப் பயன்படுத்த முடியாது. தற்போது உள்ள அஞ்சல் விசைப்பலகையை நீக்கி விட்டு, தமிழ்99க்கான எ-கலப்பையை

http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=5

என்ற முகவரியில் இருந்து தரவிறக்கி நிறுவிப் பயன்படுத்தலாம்.

அஞ்சல், தமிழ்99 விசைப்பலகைகள் இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த விரும்பினால் NHM writer மென்பொருள் பயன்படுத்தலாம்.

http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx

Reply

26 ilangovan January 17, 2009 at 11:41 pm

Vanakam,
Ubuntu 8.04 -il tamil99 murai thattachu saathiyamaa?

Reply

27 ரவிசங்கர் September 3, 2009 at 1:14 am

சாத்தியம். நீங்களே எனக்கு அனுப்பி வைத்த தொடுப்பு :) மற்றவர்கள் பார்வைக்காக –

https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-November/001665.html

Reply

28 ரவிசங்கர் January 18, 2009 at 9:42 pm

இளங்கோவன்,

http://tabuntu.sourceforge.net/

http://tamilgnu.blogspot.com/2007/05/blog-post.html

பக்கங்களில் உள்ள தகவல் உதவும். தபுண்டு நிறுவிய பிறகு SCIM கொண்டு தமிழ்99 முதலிய விசைப்பலகைகள் கொண்டு எழுதலாம்.

Reply

29 சுப்பையா வீரப்பன் January 26, 2009 at 10:43 am

அய்யா,

நான் ஈ-கலப்பை மென் பொருளைத் தட்டச்சு செய்யப் பயன் படுத்துகிறேன்
அடோப் பேஜ் மேக்கரில் தட்டச்சு செய்வதை ஒட்டினால் தமிழ் தெரிவதில்ல. பூச்சி பூச்சியாகத் தெரிகிறது. ஈகலப்பையில் த்ட்டச்சியதை அடோப் பேஜ் மேக்கரில் உள்ளிட எழுத்துரு மாற்ரி ஏதேனும் உள்ளத? இருந்தால் அதன் சுட்டியை தந்துதவ் வேண்டுகிறேன்

எனது மின்னஞ்சல் முகவரி
umayal2005@gmail.com

அன்புடன்
சுப்பையா வீரப்பன்

Reply

30 ரவிசங்கர் February 3, 2009 at 4:23 am

வணக்கம் சுப்பையா வீரப்பன்.

adobe pagemakerல் எ-கலப்பை பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கலாம். NHM writer மென்பொருளில் தட்டச்ச இயல்கிறது என்று அறிகிறேன். NHM writerலும் ஒருங்குறி முறையில் எழுத இயலாது. tab, tam, tscii, shreelipi குறிமுறைகள் செயல்படும். nhm writer settingsல் toggle mode – avoid alt key என்பதையும் தெரிவு செய்ய வேண்டும்.

தகவல் உதவி: K. S. Nagarajan

Reply

31 நம்பி.பா February 6, 2009 at 7:59 pm

அன்பின் ரவிசங்கர்,
நீங்கள் அளிக்கும் தகவல்களுக்கும், உங்கள் உழைப்புக்கும் மிக்க நன்றி!

இ-கலப்பையையும், தமிழ் விசையையும், பழைய தட்டச்சு முறையில் தமிழெழுதப் பயன்படுத்தியிருந்த நான், கடந்த நவம்பரில் உங்களின் தமிழ் 99 குறித்த பதிவுகளைப் படித்ததிலிருந்து, முழுதாய் தமிழ் 99 முறையையே பயன்படுத்தி வருகிறேன். தமிழ் 99 உள்ளீட்டு முறை ஓரிரு மாதங்களுக்கு பெரும் தடுமாற்றமாக இருந்தாலும், இப்போதெல்லாம் மிகவும் எளிதாகவே உள்ளது. பயர்பாக்ஸில் தமிழ் விசையையும், மற்ற நேரங்களில் என்எச்எம் எழுதியையும் பயன்படுத்தி வருகிறேன்.

நம்பி.பா.

Reply

32 ரவிசங்கர் February 7, 2009 at 5:29 am

மிக்க மகிழ்ச்சி நம்பி. உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் தமிழ்99ஐ அறிமுகப்படுத்துவீர்கள் தானே?

Reply

33 Raja April 13, 2009 at 12:42 pm

Dear Sir,

I am unable to find the software in the folloing link

http://tamil99.org/tamil99-software

Thank you

Reply

34 kumar M May 8, 2009 at 4:02 am

sir,

I m a M.Tech student.. doing project in tamil linguistics.
for this work I need a large tamil document . I downloaded from
http://www.textbooksonline.tn.nic.in website.. That files are PDF files. I want same content in .doc files. I try to copy and paste.. But font is not supporting? can u help me.. R u know which font they(http://www.textbooksonline.tn.nic.in) r using?? thanks in advance…my e mail is manand_info@yahoo.co.in

Reply

35 புருனோ May 10, 2009 at 3:25 am

Download the files

You can copy from the PDF File (Copy protection is not enabled)
The encoding is softview

You can use NHM Converter to convert it
http://software.nhm.in

Reply

36 Kumar May 10, 2009 at 8:39 am

thank u sir…

Reply

37 பாலாஜி June 22, 2009 at 7:56 am

ஐயா,

நான் தமிழ்99 கொண்டு தான் அனைத்திலும் எழுதி வருகிறேன்(Wordpad, Outlook Mail etc). தமிழ் எண்களை இவை எவற்றிலும் என்னால் எழுத முடியவில்லை. எவ்வாறு தமிழ் எண்களை எழுதுவது ?

Reply

38 ரவிசங்கர் September 3, 2009 at 1:10 am

NHM writer மென்பொருள் பயன்படுத்தினால் தமிழ் எண்களை எழுத முடியும்.

1~

2~

என்று எழுதினால் தமிழ் எண்களான

௧, ௨, ௩, ௪, ௫

வரிசையை எழுதலாம்.

Reply

39 sinniah krishna July 5, 2009 at 11:24 am

hello i neet shamthing how many year is goto inchat reading to tamil chat

Reply

40 sinniah krishna July 5, 2009 at 11:45 am

i am try chaing tam stil cantchat

Reply

41 ரவிசங்கர் September 3, 2009 at 1:12 am

தமிழில் எழுதும் எந்த மென்பொருளைக் கொண்டும் gmail chat முதலியவற்றில் தமிழில் உரையாட இயலும்.

Reply

42 eswarn September 7, 2009 at 3:10 am

hello ரவிசங்கர்,
i have interest Tamil typewriting
what is uni-code Tamil typewriting,
where to learn sir,
pls send full detail

Reply

43 Ravichandran J October 25, 2009 at 5:13 pm

I am using Kubuntu 7.04.I want to use Tamil99 in all the applications including Open Office.Please help.

Reply

44 syedbasha March 9, 2010 at 10:48 pm

tamil soft dowload save tamil sms , Email tamil yahoo. working

Reply

Leave a Comment