கேள்விகள்

தமிழ்99 குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான விடைகள்

1. தமிழ்99 விசைப்பலகை முறையில் எழுதிப் பழக எவ்வளவு நாளாகும்?

தமிழ்99 விசைப்பலகை அமைப்பைப் புரிந்து கொண்டு எழுதத் தொடங்க ஒரு சில நிமிடங்களே போதும். வேகமாக எழுதக் கை வர ஓரிரு வாரங்கள் பயிற்சி போதும். நீங்கள் முதன்முதலில் தமிழில் எழுதத் தொடங்கும்போதே தமிழ்99 முறையைப் பின்பற்றினால் இதைப் பழகிக் கொள்வது எளிது. ஏற்கனவே தமிங்கில விசைப்பலகை, பாமினி விசைப்பலகை போன்றவற்றைப் பழகி இருந்தால் தமிழ்99 கைவர கூடுதல் நாட்கள் ஆகலாம். ஆனால், தமிழ்99க்கு மாறுவது என்று முடிவெடுத்து விட்டால் நீங்கள் ஏற்கனவே பழகியிருக்கும் பிற விசைப்பலகை முறைகளை முற்றிலும் தூக்கிப் போட்டு விட்டு இதற்கு மாறினாலே வேகம் கைக்கூடும். உங்கள் வழமையான பணிகளுக்கு வேறு விசைப்பலகையையும் பழகுவதற்கு என்று நாளுக்கு சில மணித்துளிகள் தமிழ்99க்கு என்றும் ஒதுக்கினால், கற்றுக் கொள்வது சிரமம். நீங்கள் ஏற்கனவே பழகி இருக்கும் முறையையும் குழப்பி விடும்.

2. எனக்கு QWERTY ஆங்கில விசைப்பலகையில் ஆங்கிலத் தட்டச்சு நன்றாகத் தெரியும். ஆங்கிலத்தில் எழுத ஒரு விசைப்பலகை, தமிழுக்கு ஒரு விசைப்பலகை என்று பழகினால் மூளை குழம்பாதா?

குழம்பாது. ஏற்கனவே தமிழ்99 பழகி நன்றாக இருக்கும் நாங்களே சாட்சி ;)

தமிழ்99 பழகிய பிறகு ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளிலும் வெவ்வெறு விசைப்பலகைகளில் எந்தக் குழப்பமும் இன்றி சீரான வேகத்தில் எழுதத் தொடங்கும்போது தான் நம் மூளையின் திறனை நாமே உணர்ந்து கொள்வோம்.

3. இதைக் கற்றுக் கொள்வது இலகுவா? எனக்கு அந்த அளவு திறமை இல்லையே?

இதைக் கற்றுக் கொள்வது மிகவும் இலகுவானது. தனித்த திறமை ஏதும் தேவை இல்லை. இந்த விசைப்பலகையைக் கற்றுக் கொள்வதற்கும் மொழியறிவுக்கும் தொடர்பு இல்லை.

4. யார் எல்லாம் தமிழ்99க்கு மாறலாம்? மாற வேண்டும்?

எல்லா தமிழர்களும் தான் ;)

வேகமாக, அயர்ச்சியின்றி, நிறைய தட்டச்ச உதவுவது தமிழ்99ன் சிறப்பு. எனவே இணையத்தில், கணினியில் தமிழில் எழுத நிறைய நேரம் செலவிடுபவர்கள், தொழில்முறையில் கணினியில் தட்டச்சு செய்பவர்கள் உடனடியாக தமிழ்99க்கு மாறிக் கொள்வது பெரிதும் பரிந்துரைக்கத்தக்கது.

5. எனக்கு ஏற்கனவே QWERTY ஆங்கில விசைப்பலகை பயிற்சி உண்டு. ammaa = அம்மா என்று எழுதுவது இலகுவாக இருக்கிறதே? இது போல் எழுத நிறைய மென்பொருள்கள் இருக்கிறதே? ஒவ்வொரு மொழிக்கும் ஒரு விசைப்பலகையைக் கற்கவா முடியும்? நான் ஏன் தமிழ்99க்கு மாற வேண்டும்? வேண்டுமானால் ஆங்கிலம் அறியாதவர்கள் மட்டும் தமிழ்99 பயன்படுத்தலாமோ?

* ஏன் தமிழ்99 சிறந்த தமிழ் விசைப்பலகையாகக் கருதப்படுகிறது?

* ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும்?

ஆகிய இரண்டு கட்டுரைகளைப் படியுங்கள். இவற்றில் ஏன் தமிங்கில விசைப்பலகையில் இருந்து தமிழ்99க்கு மாற வேண்டும் என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

சுருக்கமாகச் சொல்வதென்றால்,

* ammaa = அம்மா என்று எழுதும் தமிங்கில விசைப்பலகையைக் காட்டிலும் இதில் வேகமாகவும், இலகுவாகவும், அயர்ச்சி இன்றியும், நிறைய தமிழில் எழுதலாம். QWERTy விசைப்பலகையில் ஒரு தமிழ்ச்சொல்லை எழுத கூடுதல் விசை அழுத்தங்கள் தேவை. தமிழ்99 முறையில் மிகக் குறைவான விசையழுத்தங்களே தேவை. இதனால், தமிழில் எழுதும் உங்கள் வேகம் கூடும்.

* ammaa = அம்மா என்று எழுதும் போது, உங்கள் மூளையில் தமிழ் எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்களாக மாற்றி எழுதுவதால் உங்களை அறியாமல் உங்கள் சிந்தனை வேகம் குறைகிறது. தவிர, வருங்காலத் தமிழ்த் தலைமுறை
இப்படி தமிழ் எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்களாக மனதில் பதித்துக் கொள்வது சரியா?

6. எனக்கு ஏற்கனவே தட்டச்சுப் பொறியில் தமிழில் எழுதுவதற்கான விசைப்பலகை முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். நான் ஏன் தமிழ்99க்கு மாற வேண்டும்?

தமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு கட்டுரையைப் பார்க்கவும்.

7. தமிழ்99 முறையில் எழுத மென்பொருள்கள் எங்கு கிடைக்கும்? காசு கொடுக்க வேண்டுமா?

தமிழ்99 முறையில் எழுத இலவச மென்பொருள்களே போதும். http://tamil99.org/tamil99-software பாருங்கள்.

8. என்னிடம் ஏற்கனவே இருக்கிற விசைப்பலகை கொண்டே எழுத முடியுமா? இல்லை, இதற்கு என்று புதிதாக விசைப்பலகை வாங்க வேண்டுமா?

உங்களிடம் ஏற்கனவே இருக்கிற விசைப்பலகையே போதும். கணினியில் தமிழில் எழுத உங்கள் விசைப்பலகையில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கத் தேவையில்லை.

9. சில மென்பொருள்களில் தமிழ்99 தட்டச்சு முறை இருக்கிறது. ஆனால் இங்கு குறிப்பிட்டுள்ள குறுக்கு வழிகள், வசதிகள் இல்லையே?

நீங்கள் பயன்படுத்தும் மென்பொருளில் அனைத்து தமிழ்99 குறுக்கு வழிகள், வசதிகளும் செயற்படுத்தப்படாமல் இருக்கலாம். http://tamil99.org/tamil99-software பரிந்துரைக்கப்பட்டுள்ள மென்பொருள்களைப் பயன்படுத்துங்கள்.

10. தமிழ்99 விசைப்பலகையில் உள்ள தமிழ் எழுத்துக்களை நினைவில் கொள்ள என்ன வழி?

உயிர் குறில்கள் – இட நடு வரிசை
உயிர் நெடில்கள் – இட மேல் வரிசை.
அதிகம் பயன்படாத ஒ, ஓ, ஔ இட கீழ் வரிசை.

அதிகம் பயன்படும் க ச த ப – வல நடு வரிசை.

அடிக்கடி ஒன்றாக வரும் ஞ்ச, ன்ற, ண்ட, ந்த, ம்ப, ங்க போன்ற எழுத்து வரிசைகள் பக்கம் பக்கமாக உள்ளன.

இப்படி நினைவில் வைத்துக் கொள்வது உதவலாம்.

11. நான் தினமும் தமிழில் நிறைய தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேனே? இதைப் பழகுவதற்காக எப்படி ஓரிரு வாரங்கள் அதைக் குறைத்துக் கொள்வது?

தமிழில் எழுதுவது என்பது உங்கள் வாழ்நாள் முழுக்க நீங்கள் செய்யப் போகும் ஒன்று. ஓரிரு வாரங்கள் இதைப் பழகுவதற்காகக் கொஞ்சம் பொறுத்து முயற்சி செய்தால் வாழ்நாள் முழுதும் நீங்கள் தமிழ் எழுதச் செலவிடும் நேரத்தில் 30% முதல் 40% நேரம், அயர்ச்சியைக் குறைக்கலாம். இதைக் கருத்தில் கொண்டு முடிவு எடுங்கள்.

102 thoughts on “கேள்விகள்

 1. J Ravichandran

  ஐயா,
  நான் ஒரு சிறு பத்திரிக்கை நடத்துகிறேன்.எனக்கு கட்டுரைகள் அனுப்புவோர் கையால் எழுதி அனுப்பிவருகிறர்கள்.ஆனால் நான் தற்போது அனைவரையும் கணினியில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளேன்.எனது பதிப்பாளர் சிறீலிபி(shreelipi) font உபயோகப்படுத்துகிறார்.நான் எனது நண்பர்களை பழைய /புதிய தட்டச்சு விசைப்பலகையை உபயோகித்து எந்த free font ல் அடிக்கச் சொல்ல வேண்டும். அது unicode fontஆக இருக்க வேண்டும் , அப்போதுதான் என்னால் எனது வீட்டில் உள்ள கணினியில் (P VI windows xp os)edit செய்யவும் அதை சிறீலிபி(shreelipi) fontக்கு மாற்ற முடியும் எனக் கருதுகிறேன்.த்யவு செய்து உதவவும்.நன்றி.

  Reply
 2. ரவிசங்கர்

  ரவிச்சந்திரன்,

  http://software.nhm.in/writer.html என்ற முகவரியில் கிடைக்கும் NHM writer என்ற மென்பொருளைக் கொண்டு உங்கள் படைப்பாளிகள் எழுதலாம். இதில் shrilipi, unicode இரண்டு முறைகளிலும் எழுதும் தெரிவுகள் உண்டு.

  உங்கள் சிறுபத்திரிகைக்கு எங்கள் வாழ்த்துகள்.

  Reply
 3. Ravichandran j

  அய்யா,
  பதிலுக்கு நன்றி.
  tamil 99 ல் தத்,மம்,டட் போன்றவற்றை எப்படி தட்டச்சு செய்வது?

  Reply
 4. ரவிசங்கர்

  த+அ+த+f = தத்

  தத்தை, தத்துவம் போன்ற தத்த என்று வரும் இடங்களில் த+அ+த+த என்று வரிசையாக அடிக்கலாம். இடையில் f தேவையில்லை. மம், டட் போன்றவற்றையும் இப்படியே எழுதலாம்.

  Reply
 5. ஜெ இரவிச்சந்திரன்

  ஐயா,
  எவ்வளவு முயன்றும் “தத்” வர மாட்டேங்கிறதே?த்த் என்றுதான் வ்ருகி்றது.உதவவும்.

  Reply
 6. ரவிசங்கர்

  நீங்கள் என்ன மென்பொருள் பயன்படுத்துகிறீர்கள்? சிலவற்றில் வழு இருக்கலாம். NHM writer, எ-கலப்பை போன்றவற்றில் சரியாக வரும்.

  Reply
 7. ஜெ இரவிச்சந்திரன்

  ஐயா,
  நான் nhm writer பயன்ப்டுத்துகிறேன். இதில் என்ன பிழை இருக்கும்?
  அது சரி,இன்று ஏன் கொக்கி எழுத்துக்கள் எல்லாம் ஒழுங்காகத் தெரியவில்லை.கொக்கிகள் எல்லாம் எழுத்தின் பின்பாகத்தில் உள்ளன

  Reply
 8. ஜெ இரவிச்சந்திரன்

  ஐயா,
  நானே கண்டுப்பிடித்துவிட்டேன்.Opera browser ல் author mode ல் இப்படி சரிவரத் தெரிய மாட்டேங்கிறது.ஏன்?

  Reply
 9. ரவிசங்கர்

  இரவிச்சந்திரன், நீங்க என்னை ரவின்னே அழைக்கலாம். ஐயா வேண்டாம் :)

  எழுத்துகள் ஓப்பரவாவில் கொம்பும் கொக்கியுமாகத் தெரிந்தது குறித்து சுட்டிக் காட்டியதற்கு நன்றி. தள வார்ப்புருவை மாற்றிய பிறகு இப்பிரச்சினை இல்லை.

  //தத்தை நத்தை தத்துவம் மம்மி//

  மேற்கண்ட சொற்களை opera 9.5, windows xp, nhm writer 1.4.0.1 பதிப்பு கொண்டு எழுதி இருக்கிறேன். உங்களால் ஏன் எழுத இயலவில்லை என்று புரியவில்லை :(

  Reply
 10. ஜெ இரவிச்சந்திரன்

  ரவி,
  wordpad ல் அடித்தால் நீங்கள் சொல்வது நடக்கிறது. ஆனால், word 2007 ல் latha font ல் தான் பிரச்சினை.

  Reply
 11. தமிழ் முகிலன்

  ஐயா, தமிழ்99 முறையில் தமிழ் எண்களை தட்ட என்ன செய்ய வேண்டும். தமிழ் எண்ணுருக்களைக் கொண்ட எழுத்துருக்கள் எவை?

  Reply
 12. ravishankar

  http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx என்ற முகவரியில் உள்ள nhm writer பயன்படுத்தி எழுதலாம்.

  1~ என்று எழுதினால் அதற்கான தமிழ் எண்ணான ௧ வரும். இதே போல் 2~ , 3~ என்று எழுதிப் பார்க்கவும்.

  தகவலுக்கு நன்றி – nhm writer உருவாக்கிய nagarajan.

  Reply
 13. கா. சேது

  ஜெ இரவிச்சந்திரன் // Sep 10, 2008 at 4:14 am :

  //ரவி,
  wordpad ல் அடித்தால் நீங்கள் சொல்வது நடக்கிறது. ஆனால், word 2007 ல் latha font ல் தான் பிரச்சினை.//

  அப்பிரச்சினை இருப்பின் லதா எழுத்துரு பயன்பாட்டுக்கு மட்டுமல்ல வேறு எந்த எழுத்துருவானாலும் அதே பிரச்சினை word 2007 இல் இருக்கும்.

  இவ்வழு பற்றி பல மாதங்கள் முன் wg02infitt யாகூ மடலாற்ற குழுமத்தில் எழுப்பட்டிருந்ததை முகுந்தராசு FTC மடலாற்ற குழுமத்திற்கு முன்கொணர்ந்த போது அதற்கான எனது வழு அகற்றும் மறுமொழி பின்வரும் பக்கத்தில் உள்ளது :

  http://lists.thamizha.com/pipermail/freetamilcomputing_lists.thamizha.com/2008-February/000609.html

  சுருக்கமாக சொல்லவதானால் பின்வருமாறு செய்யவும் :

  1) Start–>AllPrograms–>Microsoft Office–>Microsoft Office Tools அமுக்கி வரும் பட்டியலில் “Microsoft Office 2007 Language Settings” என்பதைச் சொடுக்கவும்.

  ஒருக்கால் மேற்கூறியவாறு Start menu வழியாக இந்த Language Settings க்கான தொடுப்பு காணப்படாவிடில் எனது மேற்காட்டிய மறுமொழியில் சொன்னது போல பின்வருபனவற்றைச் செய்யுங்கள்:

  a). வேர்ட்-2007 சாரளத்தில் மேல் இடது கோடியில் விண்டோவிற்கான சின்னத்துடன் தெரியும் பட்டனை அமுக்கி வரும் நிரல் பெட்டியில் “Word Options” என ஒரு பட்டன் இருக்கும். அதை அமுக்குங்கள்.

  b). திறக்கப்பட்டிருக்கும் “Word Options” நிரல் பெட்டியில் “Language Settings” பட்டனை அமுக்குங்கள்.

  (அந்த “Language Settings” எல்லா MS Office 2007 செயல் நிரல்களுக்கும் பொதுவானதே)

  2) அடுத்து திறக்கப்பட்டிருக்கும் “Microsoft Office Language Settings 2007″ நிரல் பெட்டியில் “Primary editing language” என்பது தமிழாக தேர்வு செய்யப்பட்டிருப்பின் அதை ஆங்கிலத்திற்கு மாற்றுங்கள். அதன் மேலே “Enabled editing languages” என்பதற்கான பட்டியலில் “Tamil (India)” என்பதை அகற்ற “Remove” பட்டனை அமுக்குங்கள்.

  அதன் பின் Word 2007 மீளாரம்பித்து தங்கள் தமிழ் விசைப்பலகை வழி தட்டச்சு செய்து பாருங்கள். பிரச்சினைகள் இருக்காது.

  எனது மேற்கூறிய FTC க்கான மறுமொழியில் Bhashaindia.com வின் Tamil IME விசைப்பலகைகள் வழியாக இந்த Language Settings க்கு மாற்றமில்லாமிலும் வழுக்கள் இல்லாமல் தட்டச்சு செய்ய இயலும் என்பதைத் தெரிவித்திருந்தேன். ஆனால் தற்போது Bhashaindia.com வின் பதிவிறக்கப் பக்கமான http://www.bhashaindia.com/downloadsV2/Category.aspx?ID=1 பாதுகாப்பான தளம் அல்ல என பயர்பாக்சில் எச்சரிக்கை வருகிறது. காரணங்களை http://safebrowsing.clients.google.com/safebrowsing/diagnostic?client=Firefox&hl=en-US&site=http://www.bhashaindia.com/downloadsV2/Category.aspx?ID=1 என்ற பக்கத்தில் பார்க்கலாம். எனவே அவ்வெச்சரிக்கை அகலும் வரை அங்கு பதிவிறக்கம் எதுவும் செய்ய வேண்டாம்.

  ~சேது

  Reply
 14. arun

  sir i am college student. online job is real or cheating . please tell me i am not prober communication engilsh, so i cant not anterstand to the job. and i am intrest to parttime job .. any web address requred.. and one time i applied to online job he is cheating.that job is one link in copy to mail to all. he is taken to Rs.1,500 what i can i to.please reply in tamil.please

  Reply
 15. ராம் சங்கர்.வ

  தமிழுக்கு வணக்கம்,
  நான் தமிழ்99 ஐ எனது மேக்புக்-ல் உபயோகிக்க விரும்புகிறேன், ஆனால் “க” எழுத்துக்கு பதில் “ஹ” என்று வருகிறது. என்ன செய்வது?

  Reply
 16. ஊரோடி பகீ

  ராம் சங்கர்,

  நீங்கள் மக்புக்குடன் இணைந்து வரும் தமிழ்99 இனை பயன்படுத்துபவராயின் எந்த பிரச்சனையும் இல்லை. எச் எழுத்துக்கு சரியாக க எழுத்து அச்சாகிறது.

  Reply
 17. angayatcanny

  i want to know do this work in all different OS?
  and compatibility? i’m not such familiar with the computer and its operations. could you please explain me how and where i have to start to use this? i want to know shall i use this to type in tamil in the internet use such as email or blogging or in such as facebook?

  Reply
 18. angayatcanny

  தமிழ் 99 ஐ முயற்சிக்கிறேன்.
  கேள்வியை நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி?

  Reply
 19. ரவிசங்கர்

  நிமல்,

  மயூரனிடம் வந்த பதில்: தபுண்டுவின் 8. 10 பதிப்பு ஒரு தெரிவுக்குழப்பத்தில் தடைப்பட்டுப்போனது. im switch எனும் மெபொருள் பற்றிய இந்த குழப்பத்தை நீக்கி சேது இடவுள்ள மடலொன்றன்பின் அது வெளிவரும்.

  angayatcanny,

  yes, you can type using this in all OS like windows, linux and mac.

  To start with, you can download NHM writer from http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx , install and start using it. u can download the user manual too at http://software.nhm.in/writer/NHMWriter-User%20Manual.pdf

  yes, u can type using it in both offline and online applications like email, facebook and Microsoft office etc.,

  I suppose you use some transliteration web page and cut copying from there. when use softwares like NHM writer, you can right straightaway in tamil in any page

  Prashanth,

  Please install NHM writer from http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx
  it will automatically install tamil unicode fonts and help u write in tamil

  Reply
 20. angayatcanny

  Thank you very much!
  I’ll try and ask if there any problem and doubts.
  as i said earlier i don’t have experience with computer.
  so it may be a challenging and need some effort.

  Reply
 21. ப. இராசமோகன்

  ஐயா

  இ கலப்பையைப் பயன்படுத்தி வலைத்தளங்களில் தட்டுகிறேன். ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு phonetic முறையில் தட்டுகிறேன். தமிழ் 99 எனக்கு நன்றாகத் தட்ட வரும். ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தட்டி விட்டுத் தமிழ் 99ல் தட்ட நேரும்போது பெரும் குழப்பம் நேர்கிறது. என்னிடம் உள்ள இ கலப்பையில் தமிழ் 99 இல்லை. அதில் தமிழ் 99 ஐப் புகுத்துவ்து எப்படி? அல்லது தமிழ் 99 உடன் இ கலப்பை கிடைக்குமா?

  அன்புடன் தெரியப்படுத்துங்கள்.
  ப. இராசமோகன்.

  rajamohan.palaniswamy@ymail.com

  Reply
 22. ரவிசங்கர்

  இராசமோகன்,

  எ-கலப்பை phonetic (அஞ்சல்) விசைப்பலகைக்கான மென்பொருளும் தமிழ்99 விசைப்பலகைக்கான மென்பொருளும் தனித்தனியே கிடைக்கின்றன. இரண்டையும் ஒரே நேரத்தில் ஒரே கணினியில் நிறுவிப் பயன்படுத்த முடியாது. தற்போது உள்ள அஞ்சல் விசைப்பலகையை நீக்கி விட்டு, தமிழ்99க்கான எ-கலப்பையை

  http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=5

  என்ற முகவரியில் இருந்து தரவிறக்கி நிறுவிப் பயன்படுத்தலாம்.

  அஞ்சல், தமிழ்99 விசைப்பலகைகள் இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த விரும்பினால் NHM writer மென்பொருள் பயன்படுத்தலாம்.

  http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx

  Reply
  1. Senthil

   தமிழ்99 மற்றும் அஞ்சல் – இந்த இரண்டு விசைப்பலகைகள் “செல்லினம்” Sellinam என்கிற MOBILE செயலியில் உள்ளது !

   Reply
 23. சுப்பையா வீரப்பன்

  அய்யா,

  நான் ஈ-கலப்பை மென் பொருளைத் தட்டச்சு செய்யப் பயன் படுத்துகிறேன்
  அடோப் பேஜ் மேக்கரில் தட்டச்சு செய்வதை ஒட்டினால் தமிழ் தெரிவதில்ல. பூச்சி பூச்சியாகத் தெரிகிறது. ஈகலப்பையில் த்ட்டச்சியதை அடோப் பேஜ் மேக்கரில் உள்ளிட எழுத்துரு மாற்ரி ஏதேனும் உள்ளத? இருந்தால் அதன் சுட்டியை தந்துதவ் வேண்டுகிறேன்

  எனது மின்னஞ்சல் முகவரி
  umayal2005@gmail.com

  அன்புடன்
  சுப்பையா வீரப்பன்

  Reply
  1. ரவிசங்கர்

   வணக்கம் சுப்பையா வீரப்பன்.

   adobe pagemakerல் எ-கலப்பை பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கலாம். NHM writer மென்பொருளில் தட்டச்ச இயல்கிறது என்று அறிகிறேன். NHM writerலும் ஒருங்குறி முறையில் எழுத இயலாது. tab, tam, tscii, shreelipi குறிமுறைகள் செயல்படும். nhm writer settingsல் toggle mode – avoid alt key என்பதையும் தெரிவு செய்ய வேண்டும்.

   தகவல் உதவி: K. S. Nagarajan

   Reply
 24. நம்பி.பா

  அன்பின் ரவிசங்கர்,
  நீங்கள் அளிக்கும் தகவல்களுக்கும், உங்கள் உழைப்புக்கும் மிக்க நன்றி!

  இ-கலப்பையையும், தமிழ் விசையையும், பழைய தட்டச்சு முறையில் தமிழெழுதப் பயன்படுத்தியிருந்த நான், கடந்த நவம்பரில் உங்களின் தமிழ் 99 குறித்த பதிவுகளைப் படித்ததிலிருந்து, முழுதாய் தமிழ் 99 முறையையே பயன்படுத்தி வருகிறேன். தமிழ் 99 உள்ளீட்டு முறை ஓரிரு மாதங்களுக்கு பெரும் தடுமாற்றமாக இருந்தாலும், இப்போதெல்லாம் மிகவும் எளிதாகவே உள்ளது. பயர்பாக்ஸில் தமிழ் விசையையும், மற்ற நேரங்களில் என்எச்எம் எழுதியையும் பயன்படுத்தி வருகிறேன்.

  நம்பி.பா.

  Reply
  1. ரவிசங்கர்

   மிக்க மகிழ்ச்சி நம்பி. உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் தமிழ்99ஐ அறிமுகப்படுத்துவீர்கள் தானே?

   Reply
 25. பாலாஜி

  ஐயா,

  நான் தமிழ்99 கொண்டு தான் அனைத்திலும் எழுதி வருகிறேன்(Wordpad, Outlook Mail etc). தமிழ் எண்களை இவை எவற்றிலும் என்னால் எழுத முடியவில்லை. எவ்வாறு தமிழ் எண்களை எழுதுவது ?

  Reply
  1. ரவிசங்கர்

   NHM writer மென்பொருள் பயன்படுத்தினால் தமிழ் எண்களை எழுத முடியும்.

   1~

   2~

   என்று எழுதினால் தமிழ் எண்களான

   ௧, ௨, ௩, ௪, ௫

   வரிசையை எழுதலாம்.

   Reply
 26. eswarn

  hello ரவிசங்கர்,
  i have interest Tamil typewriting
  what is uni-code Tamil typewriting,
  where to learn sir,
  pls send full detail

  Reply
 27. Pingback: தமிழ்99 செய்திகள்

 28. Pingback: பிற தளங்களில் எழுதியவை..

 29. அ.பிரகாஷ்

  வணக்கம் ரவி! தமிழ்99 விசைப்பலகையை தமிழர்கள் எல்லோரும் பயன்படுத்தவேண்டும் என்பதற்காக நீங்களும் மயூரேசனும் எடுத்துவரும் முயற்சிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றன. பாராட்டுக்கள்.என்னுடைய தமிழ் 99 விசைப்பலகையில் முதல் பின்னூட்டம் தங்களுக்கு தான். பாமினியில் இருந்து இதற்கு மாறும்போது கொஞ்சம் சிரமமாக இருந்தது. தற்பொழுது இலகுவாக இருக்கிறது.

  Reply
 30. ஜெ இரவிச்சந்திரன்

  ஐயா,
  உபுண்டு 11.04-ல் தமிழ்99 லும் பழைய தட்டச்சு முறையிலும் பிரச்சினை ஏதுமின்றி தட்டச்சு செய்யமுடியுமா?
  தற்போது உபுண்டு10.10 – phonetic மற்றும் Remington முறையில் தட்டச்சு செய்கிறேன். அதில், தமிழ்99 யினை கொண்டுவருவதுஎப்படி?

  Reply
 31. ரகு

  Friends,
  I am using macbook and i am trying to blog or write my posts in tamil, Finding it difficult, I have installed Tamil 99, Tamil visai etc

  Now i landed up on this site and found the learning practice.
  How to get these letters போ, றை.

  Help please

  Reply
 32. R.SUBAS

  ஐயா
  தாங்களுடைய படைப்புக்கு சிகரம் தொட்டிய வாழ்த்துக்கள் நான் வழமையாக இந்த இனையஉலாவியுடாக பல தகவல்களை பெற்றுள்ளேன் அந்தவகையில் நான் எதிர்பார்த்த ஓர் சில விடையங்களை எவரும் கேட்பது குறைவு ஐயா இனையத்தில் பல தமிழ் எழுத்துருக்கள் இருக்கின்றன அதாவது எல்லாமே லத்தா என்று இவ் எழுத்துருவை களகத்திற்கு எவ்வாறு மாற்றி பதிவிறக்கம் செய்யலாம் அல்லது லத்தா fontஎழுத்துருவை பதிவிறக்கம் செய்து விட்டு எதாவது வழிமுறை மூலம் மாற்றிக்கொள்ளலாமா தயவு செய்து எனது பிரச்சினையை தீர்ப்பீர்களா?

  Reply
 33. krishnan

  தமிழ் 99 மிகவும் எளிதாக உள்ளது. பேஜ்மேக்கரில் தமிழ் 99 எடுத்துக் கொள்ளவில்லை.
  உதவி வேண்டும்.

  Reply
  1. lokan

   http://www.azhagi.com/ என்ற link ல் click செய்து பிறகு azhagi setup file ஐ download செய்து உங்கள் கணினியில் instal செய்யவும் பிறகு அந்த software ஐ open செய்து தமிழ் 99 font ஐ click செய்யவும் பிறகு உங்களுக்கு வேண்டியவற்றை தமிழில் type செய்த பிறகு அதை copy செய்து அவற்றை photoshop மற்றும் corel draw, pagemaker software ஐ திறந்து அதில் paste செய்தால் அப்படியே எந்த சிக்கலும் இல்லாமல் உங்களுக்கு வேண்டிய text அப்படியே paste ஆகும் . நன்றி………………

   Reply
 34. Sai

  நான் தமிழ்நெட் 99 விசைப்பலகையை XPஇல் பல வருடங்கள் பயன்படுத்தி வருகிறேன். NHM செயலி அது. இப்போது Windows 2007இல் அதே மென்பொருளை நிறுவிய பிறகு MSWordஇல் புள்ளி எழுத்துகள் சரியாக வேலை செய்யவில்லை. க என்ற எழுத்தை நான்கு முறை தொடர்ந்து தட்டச்சு செய்தால் க்கக்க என்று வருவதற்குப் பதிலாக க்க்க்க என்று வருகின்றது. இதை எப்படிச் சரி செய்வது? ஆனால், Notepadஇல் தட்டச்சு செய்தால் எந்தக் குழப்பமுமின்றி சரியாகவே (அதாவது க்கக்க) வருகின்றன.

  தங்கள் உதவியை எதிர்பார்க்கிறேன்.
  அன்புடன்
  சாய்

  Reply
  1. Johnson Victor

   நானும் இதே பிரச்சனையைச் சந்தித்து வருகிறேன். ஆனால், நானே சுயமாக ஒரு தீர்வையும் கண்டு பிடித்து வைத்திருக்கிறேன். குறிப்பாக எம்.எஸ்.வோர்ட்டில், இப்படித் தோன்றுகிற பிழைகளை முதலில் கண்டு கொள்வதில்லை. ஆவணம் முழுமையாக தயாரான பிறகு, Proof Reading செய்யும் போது, இது போன்ற ஒரு பிழையைக் கண்டு பிடித்து விட்டால், அந்த ஆவணம் முழுவதும் பல பிழைகள் இருப்பதாகக் கருதி, Find & Replace வசதியைப் பயன்படுத்தித் திருத்திக் கொள்வேன். நீங்கள் காட்டிய உதாரணத்தில் Find என்ற பட்டியில் ‘க்க்க்க’ Copy & Paste செய்து கொள்வேன். பின்னர் Replace என்ற பட்டியில் ‘கககக’ என்று தட்டி, ‘Replace All’ என்ற விசையைத் தட்டுவேன். இதன் வழி, ஆவணம் முழுவதும் உள்ள இது போன்ற தவறுகள் தானகத் திருத்தப் பட்டு விடுகிறது. இந்த வசதியைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள், ஒவ்வொரு பிழையையும் தேடித் திருத்தி, அயர்வைச் சந்திக்க நேரிடும்.

   இலங்கையில் உள்ள ஒரு நண்பர், இது தொடர்பாக கருத்துரைத்த போது, விண்டோஸ் 8ல் இந்தத் தவறு தோன்றுவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார். எனவே, இது என்.எச்.எம் பிரச்சனை அல்ல, மாறாக விண்டோஸ் பிரச்சனை என்று அனுமானிக்கலாம்

   Reply
 35. rajeshs

  நான் தமிழ்நெட் 99 விசைப்பலகையை XPஇல் பயன்படுத்தி வருகிறேன்.
  நந் நந் நந் நந் ——— ந்ந ந்ந ந்ந ந்நந இந்த தவறை எப்படி திருத்துவது .

  Reply
 36. Anonymous

  வணக்கம்..சார்….நான் உங்கள்..இணைய தளத்தை படித்து வருகிறூன்.எனக்கு conversation and some compound words definitions.கொடுத்தால்…usefulla இருக்கும்…
  email id:rajancs26@yahoo.com.
  thanks for ur great job

  Reply
 37. lokan

  நான் பயன்படுத்துவது nhm writer இருந்தாலும் என்னால் photoshop மற்றும் coreldraw ல் பயன்படுத்தமுடியவில்லை தயவுசெய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று கூறவும்.

  Reply
 38. lokan

  நான் பயன்படுத்துவது nhm writer இருந்தாலும் என்னால் photoshop மற்றும் pagemaker, corel draw ல் தமிழ் எழுத்துக்களை type செய்ய முடியவில்லை தயவு செய்து எவ்வாறு தமிழ் எழுத்துக்களை photoshop மற்றும் pagemaker, corel draw ல் பயன்படுத்துவது என்று கூறவும். நன்றி…………………..

  Reply
 39. Sakthivel

  Anbulla Ravi Anna,
  Enakku Tamil typewritting Avvalavaaga Theriyaathu….. Naan Mozilla firefox-il Add on-il Tamil font payanpaduthugiren… Adthil Tamil99 font matrum Baamini font pondra niraiya font irukkindrathu.. adhil tamil type pannauvadhu eppadi endru Sollungal…….

  Reply
 40. Tamizha

  All
  Vanakkam. I have some trouble with Adobe photoshop when key in any format of fonts in Tamil. The word breaking apart. Can anybody advice. I need to apply Tamil words in photoshop and after effects. Please advise and really appreciate if Tamil break thru into adobe. Vaazhge Tamizh

  Reply
 41. மனோஜ் அருண்

  அான் தமிழ் தட்டச்சு தேர்வில் வெகு காலம் முன்னர் தேர்ச்சி பெற்று உள்ளேன். சமிப காலங்களில் ப் அஞ்சல மூலம் பத்திரிகை செய்தி அனுபபுவதற்கும், முக நூலில் நண்பர்களுடன் எண்ணங்களை பரிமாறும் போதும் ” தமிழ் ” விசைப் பலகையின அத்தியாவசியம் புரிகிறது .தங்களது அறிவுரைப்படி உபயோகித்து பார்த்து எனது அனுபவத்தை தங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். நன்றி..

  Reply
 42. R Venkatachalam

  ஐயா,

  நான் NHM writer ஐப் பயன்படுத்தி எழுதிவருகிறேன். இரண்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டு உள்ளேன். எதிர்காலத்தில் செலவைக்குறைக்கும் எண்ணத்தில் நானே பேஜ் மேக்கரில் அடித்துத் தர நினைக்கிறேன். பேஜ் மேக்கரில் எப்படி NHM ஐப் பயன்படுத்துவது என்று கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்99 க்கு என்னால் எளிதாக மாற்றிக்க்கொள்ள இயலுமா?

  Reply
 43. aravind

  Hi,

  I wanted to type the below text in tamil99 keyboard (have tried tamil99 keyboard from different vendors but the same result)
  தத்தை மம்மி பப்பளம் குங்குமம் காமம் கருமம்

  but I am getting only the below text. To type it correctly i have to remove the புள்ளி by pressing backspace and then type
  த்ததை ம்மமி ப்பபளம் குங்கும்ம் காம்ம் கரும்ம்

  Is this an error in Tamil99 specification or is there any other way I could type without pressing backspace to correct the letter?

  Your advise would by very helpful. Thank you!

  software used for typing
  online keyboards:
  http://www.keymanweb.com/go/tam/ekwtamil99uni
  http://wk.w3tamil.com/index.php

  and ibus tamil99 (m17n) keyboard in Fedora

  Reply
  1. aravind

   Found out myself
   For த்ததை I was typing l+l+l+r, but came to know that I have to type l+a+l+l+r
   அ =a is the delinking symbol
   Sorry for the trouble.

   Reply
  2. ரவிசங்கர்

   This is by design and not a software error by the developer.

   Most of the Tamil words have sequences like அத்தைப்பாக்காம்மா. That’s why when you type a consonant twice, it auto adds pulli for the first letter. This is actually a convenience when you count the percentage of such occurances in a text. This auto pulli feature is also there for combinations like ன்ற, ங்க, ந்த, ண்ட, ஞ்ச etc.,

   Coming to your question, you don’t need to press backspace, just type அ after the first consonant.

   For example, த+அ+த்தை, ம+அ+ம்மி.

   Reply
   1. குரு மூர்த்தி

    ரவி,
    உங்கள் குறிப்புகள் பின் பற்றி தமிழ் 99 பத்து நாளில் தட்டச்சு செய்ய முடிகிறது.அற்புதமான சேவை.உங்களைப்போன்றோர் எப்போதும் இருப்பீர்கள் .உங்களால் தமழ் வாழந்து நிலைக்கும்.ஆதரவுகள்.ஆசிகள்.

    Reply
 44. Subash

  Hi Ravi Sir; I’m 16. Is there any tamil99 type teaching software? Because I have heard about a software “tamil99 thunaivan” or something like that that teaches tamil99. I have tamil99 typing software but I do not know anything about it’s letter placement. So, please reply me. It will help me. AND SOON I WILL REPLY YOU IN TAMIL

  Reply
  1. Senthil

   Hi

   Android : If you want in Mobile ( Tamil99 and Anjal Keyboards ) – then use Sellinam Apps.
   Apple have this Keyboards as inbuilt new Feature in IOS7

   regards
   Senthil

   Reply
 45. anand

  உங்களுக்கு தெரியுமான்னு தெரியல. google transliteration அப்படின்னு ஒரு மென்பொருள் உள்ளது. அதில் தமிழ் தட்டச்சு இல்லாமலே ஆங்கில சொற்கள் தட்டுதலின் மூலம் தமிழ் அகர முதலியை பெறலாம். மிகவும் தெளிவான நுட்பமான வார்த்தைகள் கூட சரியாக வெளிப்படுத்தலாம். இந்த கருத்தில் ஏதேனும் மாற்று உள்ளதா….?

  Reply
 46. ஜெயா

  5 ஆண்டுகளுக்கு முன் நான் தமிழ் பழைய விசைபலகையை பயன்படுத்தி இளநிலை தேர்வு முடித்தேன். தற்பொழுது எந்த வகை விசைபலகை அரசு தேர்வில் பயன்படுத்தப்படுகிறது? மேலும் நான் தற்பொழுது NHM writter உபயோகிக்கிறேன். இதில் அரசு தேர்வுக்காக பயன்படும் விசைபலகை எது?

  Reply
 47. றி. முகம்மது அபூபக்கர்

  நல்ல முயற்சி… சிறந்த சேவை… உளமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்…
  இந்தப் பக்கத்தை தொடர்ந்து நடாத்த நன்கொடை தேவை என்று அடுத்த பக்கத்தில் கண்டேன். உங்கள் தேவை இதுவரை நிறைவேற்றப்படாவிட்டால் தயவு செய்து எனக்குத் தெரியப்படுத்தவும்.
  நன்றி!

  Reply
 48. Karu

  hi
  I am looking for” Standalone” Tamil 99 on-screen keyboard.
  Where can i download? could anyone help
  Thanks
  Karu

  Reply
 49. Velmurugan

  I had enabled Tamil Keyboard[Control panel->Region and Language ->Keyboard and Layouts->Change Keyboards->General->Tamil(India)] in Windows 7. I don’t know Tamil typing, This windows 7 typing entirely different from net Keyboard combination.
  Is it possible to change that windows 7 default Tamil typing option to our common stander-ed ?
  Is it necessary to install software like Tamil99 ,NHW writer, etc,?
  What is Common stranded or Software to learn Tamil typing ?

  Reply
 50. N.Subramanian

  Dear sir,I happened to see the “Mangayar Malar of June1-15 issue page 74, wherein the script in Tamil conversion under phonetic usage can be created. Already I have installed a similar one under “AZHGI “of phonetic version in many languages including sanskrit etc. Also I have another script in Tamil under ” NEW KANNAN ” typingin my computer. I am having one 7″x$’ tablet &. I am interested in RUDRAMAHANYASAM converted from SANSKRIT containing 240 pagesinto Tamil version for 65 pages. But wnen I used the memory card of tamil Rura mahanyasam in the tablet, the words Tamil do not appear But only engish conversion appers- which is difficult to read. Will I have the same problem in this (your) phonetic version? Pl elusidate. The reason behind the conversion in tablet is it has UK/USA english only with oter langvages other than India-especially TAMIL . What should I do in this Pl explain. A word of reply will be appreciated.
  Thanking You.
  Subramanian

  Reply
 51. flirting online

  The only way to avoid being scammed is simply observing and exercising caution when
  you choose to date online. No matter who you want to chat with, where you want to call to, or who
  you are trying to speak to when you have not been able to in the past due to
  pricey costs, today there are many great services on the web which can be utilized in order for you to
  be able to chat with the people you love, and be able to speak to them on
  a more regular basis, due to the many different chat services online.
  The night after prom during our senior year, the two of us were partying at a friends
  place.

  Reply
 52. mahendiran

  எ கலப்பையில் typewriter முறையில் தட்டச்சு செய்யும்போது திருக்கோவிலூர் என்று தட்டச்சு செய்யும்போது திருகோவிலூர் என்று வருகிறது அதில் க் காணாமல் போய்விடுகிறது இதை எப்படி சரி செய்வது? எதனால் இப்படி மாறுகிறு. இரண்டுமுறை க் போட்டு அடித்தால் ஒரு க் காணாமல் போய் சரியாக திருக்கோவிலூர் என்று வருகிறது.

  Reply
 53. Senthil

  வணக்கம்

  தமிழ் 99மற்றும் அஞ்சல்

  இந்த இரண்டு விசைப்பலகைகள் “செல்லினம்” என்கிற செயலியில் உள்ளது !

  sellinam.com

  ஆப்பிள் IOS7 & Google Android ஆண்டிராய்டு
  ——————————————————————–

  Sellinam have both Tamil99 & Anjal ( Phonetic ) Keyboard for Tamil Mobile Users.

  in Apple IO7 -This has been the new feature.
  For Android Mobile – It can be downloaded in Play Store ( Search with words Sellinam )

  Thanks

  Reply
 54. windykacja blog

  Hello! Do you know if they make any plugins to help with SEO?
  I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not seeing very
  good success. If you know of any please share.
  Thank you!

  Reply
 55. Bess

  I feel that is amog the soo much significant info for me.
  And i’m gllad studying your article. But wanna observation on some
  general issues, The web site taste is perfect, the articles is in point of fact
  excellent : D. Just right job, cheers

  My webpage: hcg weight loss north carolina,
  Bess,

  Reply

Leave a Reply

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>